வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கட்சிக்கொடிகள்

கோவை, நவம்பர் 1: புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட காந்திபுரம் மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கய அமைச்சர்கள் இன்று கோவை வருகின்றனர். இதனால், நகரின் அனைத்து சாலைகளும் கட்சி விளம்பர பேனர்களால் நிரப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, அவினாசி சாலையின் இருபுறமும் கட்சி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு, சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் ஆயிரக்கணக்கான கட்சிக் கொடிகளும் கட்டிவைக்கப்படுள்ளன.



சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் உள்ள சிறிய ஓட்டை வழியாக மரக்கட்டையை நுழைத்து, அதில் கட்சி கொடியைக் கட்டிவைத்துள்ளனர். இந்த மரக்கடைகள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையின் நடுவே நீட்டி கொண்டிருப்பதால் வாகன விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் இந்த மரக்கட்டைகளை ஒட்டிச் செல்லும்போது மிகவும் கவனமாக சாலையைக் கடக்க வேண்டியுள்ளது.



கட்சிக்கொடி கட்டிவைக்கப்பட்டுள்ள ஓர் மரக்கட்டையில் இடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கல்லூரி மாணவர் பிரசாத் கூறியதாவது, 'நான்கு சக்கர வாகனங்கள் அருகில் வந்ததால், என்னுடைய இரு சக்கர வாகனத்தை சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை ஒட்டி நகர்த்தினேன். எதிர்பாராத விதமாக தடுப்புகளில் நுழைக்கப்பட்டுள்ள மரக்கட்டை ஒன்றில் இடித்து எனது வாகனம் நிலை குலைந்தது. மிதமான வேகத்தில் வந்ததால் வாகனத்தை கட்டுப்படுத்தி உயிர் தப்பினேன். சாலையின் ஓரத்தில் மரக்கடைகள் நீட்டிகொண்டிருப்பதால் வாகனத்தை ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் கட்சிக்கொடிகளும், விளம்பர பேனர்களும் வைக்கப்படுவதால் சாலைகளின் அளவே குறைந்து விடுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகின்றது. ஆபத்தான வகையில் கட்டப்படும் கொடிகளால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. மக்களை காப்பாற்ற வேண்டிய அரசே, மக்களுக்கு இடையூறாக செயல்படுவது வேதனையளிக்கிறது.' என்றார்.



சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் ஆபத்தான வகையில் கட்டப்படும் கட்சிக்கொடிகளில் பல காற்றின் வேகத்தால் சாய்ந்து சாலையின் நடுவே விழிந்து விடுகின்றன. நகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பான லட்சுமி மில்ஸ் சந்திப்பில் சாலையின் நடுவே சாய்ந்து விழுந்துள்ள கட்சிக்கொடி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவருகின்றது. 

இதுகுறித்து கோவை நுகர்வோர் தன்னார்வ அமைப்பின் செயலர் கே.கதிர்மதியோன் கூறியதாவது, 'செடிகளால் அமைக்கபட்டிருந்த மண் தடுப்புகளில் கொடிகள் ஊன்றப்படுவதால் தான் தற்போது இருக்கின்ற கான்க்ரேட் தடுப்புகள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டன. சிறிய ஓட்டை வழியாக, இதிலும் கொடிகள் கட்டத் தொடங்கிவிட்டனர். இவ்வாறு கட்சிக்கொடிகள் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. காரணம், சாலை தடுப்புகளில் கொடிகள் கட்டக்கூடாது என்பது அரசின் விதி. சாலைகள் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தாலும், விதிகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அனுமதியுள்ளது. அரசியல் காரணங்களால் இதுபோன்ற விதிமீறல்கள் தட்டிகேட்கப்படுவதில்லை.' என்றார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...