செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முழுமையாக இணைந்த மலைவாழ் கிராமங்கள்

கோவை, நவம்பர் 1 : கோவை மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்தனர். 

பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட செல்வமகள் சேமிப்புதிட்டம் 10 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு மட்டுமே உரிய திட்டமாகும். அதிக வட்டிவிகிதம் கொண்ட இந்தத் திட்டம் மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது. மலைவாழ் மக்களிடம் அஞ்சல்துறையின் நலதிட்டங்கள் சென்றடையும் வகையில்,  பாலமலை பகுதியில் அமைந்துள்ள மாங்குலி பசுமணி, பசுமணிப்புதூர், பெரும்பதி, பெருக்குபதி, குஞ்சூர்பதி, ராயரூத்துபதி ஆகிய மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு செல்வமகள்  சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டது.

இதற்காக, கடந்த மாதம் 10-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குப் புத்தகங்களை வழங்கினார். விழாவில் பிறந்து 9 மாதங்களே ஆன குழந்தைகளுக்குக் கூட கணக்கு தொடங்கப்பட்டது சிறப்பு அம்சமாகும்.

தொடர்ந்து, விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி பேசுகையில், அஞ்சல்துறையின் மகத்தான சேவைகள் இன்னும் தொடர வேண்டும். அதற்கு முழு ஒத்துமழைப்பு அளிக்கப்படும். இவ்வாறு கூறினார். 

இறுதியில், மலைவாழ் மக்களுக்கு கணக்கு துவங்க உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...