விபத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

கோவை, அக்டோபர் 31: கடந்த 2015-ம் ஆண்டு மதுக்கரை அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத பேருந்தை கோவை முதலாவது சார்பு நீதிமன்றம் ஜப்தி செய்தது. 



மதுக்கரை அருகேயுள்ள ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிட்டான் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து மோதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அரசு பேருந்து மோதி பலியான கிட்டான் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சத்து 86 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. இதனை அரசு போக்குவரத்து கழகம் இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. 

இந்த நிலையில், உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக்கோரி கிட்டானின் மனைவி பாப்பாத்தி கோவை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 7.5 சதவீத வட்டியுடன் ரூ. 5 லட்சத்து 11 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும், அதை போக்குவரத்து கழகம் வழங்காததால், பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதிகாரிகள், அரசுப் பேருந்தை பறிமுதல் செய்தனர். 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...