பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க மு.க.ஸ்டாலின் கோவை வருகை

பேரறிஞர் அண்ணாவின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில்  வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிகள் நாளை (அக்டோபர் 29) நடைபெறவுள்ளது.

இதில் வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்று கோவை விமானநிலையம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, திருச்சி சாலை, ஒலம்பஸ் அடுத்த ருக்மணி நகரில், மறைந்த தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மனைவி மாரியம்மாள் மறைவிற்கு, அவரது வீட்டிற்கு சென்று மகாலிங்கம் மகன் மாணிக்கம், மருமகன் கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்த மு.க.ஸ்டாலின், மாரியம்மாள் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக அவர் மேட்டுப்பாளையம் சென்றார்.



இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக கமுதி, பசும்பொன்னிற்கு செல்கின்றார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...