ஆர்த்தோ ஒன் சார்பில் ரயில்வே ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

கோவை, அக்டோபர் 28: கோவையில் செயல்பட்டு வரும் ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் சார்பில் ரயில்வே ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை பணிமனை அருகே நடந்த இந்த முகாமில், ஏராளமான ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு, தங்களை பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவர்கள், சத்யா விக்னேஷ், சிவக்குமார், கணேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 

இந்த மருத்துவ முகாம் குறித்து ஆர்த்தோ - ஒன் நிறுவனர் டேவிட் வி ராஜன் கூறுகையில், பொதுவாகவே, ரயில்வேத்துறையில் பணிபுரிபவர்கள் உடலை உழைப்பால் கொடுக்கும் பணியை நாள்தோறும் செய்வர். இதனால், அவர்களுக்கு, தோள்பட்டை, முதுகு, கை, கால்கள் இணைப்பு மற்றும் தசை பிடிப்பு போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் கண்டிப்பாக வர அதிக வாய்ப்புகள் உள்ளது. இதேபோல, மற்ற துறை பணியாளர்களுக்கும், அவரவர் வேலைக்கேற்றவாறு எலும்பு பிரச்சனைகள் வரும். எனவே, பணி செய்யும் இடங்களில் நல்ல உடல்நிலையுடன் வேலை செய்யும் நோக்கில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. 



ஆர்த்தோ - ஒன் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனையானது, பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை மேற்கொண்டு, எலும்பு முறிவு சிகிச்சை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



பிரபல தனியார் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆர்த்தோ - ஒன் மருத்துவமனையானது, தென்னிந்தியாவில் உள்ள சிறந்த 10 மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...