காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் நவ.,1-ம் தேதி திறக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு


கோயம்புத்தூர், அக். 28: கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நவம்பர் 1 ம் தேதி திறக்கப்படும் எனவும் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் எனவும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை விமான நிலைய விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு  இருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.

கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.அமைச்சர்  வேலுமணி,தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,கோவை மாவட்ட ஆட்சியர்,கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் விமானநிலையஆணைய அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பின்னர்  அமைச்சர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நில நிர்வாக  குழு ஆணையர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும்,நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகளை விரைவாக அந்த குழு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.விமான நிலையம் மேம்படுத்தப்பட்டால் கோவை,திருப்பூர் மாவட்டங்கள் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்தவர்,விமான நிலைய விரிவாக்கத்திற்காக பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு  அவர்களுக்கு உரிய தொகை கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நவம்பர் 1 ம் தேதி திறக்கப்படும் எனவும் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் எனவும் படிப்படியாக மெட்ரோ ரயில் பாலங்கள் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...