இந்தியாவிலுள்ள நிறுவனங்களில் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது


ஜப்பானை சேர்ந்த யஸ்காவா ரோபாட்டிக் நிறுவனம் மற்றும் கோவை தலைமையிடமாக கொண்ட ஆக்சிஸ் குளோபல் ஆட்டோமேசன் நிறுவனம் சார்பில் தொழித்துறை ரோபாட்டிக் மாநாடு கோவை சிங்காநல்லூர் பகுதயில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.



இது குறித்து யஸ்காவா இந்தியாவின் இயக்குனர் மற்றும் முதன்மை அலுவலர் யாசுநோரி மட்சுமோட்டோ கூறும்போது தற்போது உலகளவில் ரோபோக்களின் (robots) பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் புதிய நிறுவனங்கள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதால் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் வருடத்திற்கு 800க்கும் மேற்பட்ட ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டு வருவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் உற்பத்தி பெருக்க தரமான பொருட்கள் தயாரித்தல் உலக நாடுகளுடன் போட்டியிடக்கூடிய தேவைகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதாக தெரிவித்தார். 

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவைகேற்ப 5 லட்சம் முதல் 100 கோடி ருபாய் வரையிலான தொழில்நுட்ப ரோபோக்களின் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.



ஆக்சிஸ் குளோபல் ஆட்டோமேசன் இயக்குனர் மற்றும் நிறுவனர் சதிஸ் செல்லத்துரை கூறும்போது ஒரு அடிப்படை தேவைக்கான ரோபோவை உருவாக்குவதற்கு 20 நாட்கள் ஆகும் என தெரிவித்த அவர் அதிக திறன் வாய்ந்த ரோபோக்களை உருவாக்க 3 மாதம் தேவைப்படும் என தெரிவித்தார்.

 அவர் மக்களிடையே தொழிற்துறையில் ரோபாட்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும் தற்போது தொழிற்சாலைகளில் 80முதல் 800வரை ரோபாட்டிக் இயந்திரங்கள் ஆர்க் வெல்டிங், பெயிண்டிங், ஸ்பாட் வெல்டிங் மற்றும் பொருட்களை கையாள்வதற்கு உபயோகபட்டுவருவதாகவும் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த 200க்கும்மேற்பட்ட தொழிற்துறையினர் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...