கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேற்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.

ஆண்டுதோறும், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மேற்கு மண்டலம், வார்டு என் 24 ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேற்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2016-2017-ம் ஆண்டு மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று (அக்.,27) நடைபெற்றது.
இதில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு.டி.என்.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் திருமதி.ப. காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.