கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலி



கோவையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், இன்று மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர். 

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த வினோத் சர்மா என்பவரது மகள் சுவாதி (24) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சுவாதி அப்பகுதியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும், நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகத்தால் அவரை காப்பாற்ற முடியாது என்றும் வீட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என்றும் கூறினர். 

தொடர்ந்து, சுவாதியின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். வீட்டிற்கு செல்லும் வழியியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் சந்தியா (10) காய்ச்சல் காரணமாக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். 



இதே போல், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (34) என்பவரும், தாராபுரம் பகுதியை சேர்ந்த சத்யா (27) என்பவரும் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். 

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...