விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் காந்திபுரம் புது மேம்பாலம்

காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதி வரும் நவம்பர் 1ம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது.



கோவை மாவட்டம், காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, நஞ்சப்பா சாலை பார்க்கேட் பகுதியில் இருந்து ஆம்னி பேருந்து நிலையம் வரை 1,756 மீட்டர் தூரத்திற்கு ஒரு மேம்பாலமும், 100 அடி சாலை கல்யாண் பகுதியில் இருந்து சின்னசாமி சாலை ராமகிருஷ்ணா மருத்துவமனை சிக்னல் பகுதி வரை 1,226 மீட்டர் தூரத்திற்கு மற்றொரு மேம்பாலமும் ரூ.162 கோடி செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட தலைமை அதிகாரி கண்ணன், மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்து பார்க்கேட்- ஆம்னி பேருந்து நிலையம் வரையிலான நீண்ட மேம்பாலம் 2017 மே 15ம் தேதிக்குள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டது.



இதனைத்தொடர்ந்து தற்போது 54 தூண்களுடன், 16.6 மீட்டர் அகலத்துடன் முதல்கட்ட மேம்பாலத்துக்கான பணிகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, வர்ணம் பூசப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது.

இதனை வரும் நவம்பர் 1ம் தேதியன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...