8 வயது சிறுவனுக்கு ரோபோட்டிக் முறையில் சிகிச்சை செய்து கே.எம்.சி.எச். மருத்துவமனை சாதனை

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் எட்டு வயது சிறுவனுக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்பை ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது. 

சிறுவனின் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகப்பைக்கு செல்லும் குழாயில் பிறப்பிலேயே அடைப்பு எற்பட்டு இருந்தது. இதனால், கிட்னியின் செயல் பாதிக்கப்பட்டது. சிறுநீரக பைக்கு அருகில் உள்ள இந்த அடைப்பை நீக்க மருத்துவர் நாக.குமரன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் என். வினோத்குமார் இருவரும் இணைந்து ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.



இந்த அறுவை சிகிச்சையில் சிறுநீர் குழாயில் உள்ள அடைப்பை நீக்கிய பிறகு மீண்டும் சீறுநீர்பையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு, சிறுநீர் பை நிறைந்தவுடன் பின்னோக்கி செல்லாத வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, நுண்ணிய தையல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுண்ணிய தையலை மேற்கொள்ள பல மடங்கு பெரிதுபடுத்திக் காட்டும் ரோபோட்டிக் நுண்ணோக்கியால் மிகவும் துல்லியமாக இந்த அறுவை சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையால், விரைவாக குணமடைவதுடன் துளையிட்டு மேற்கொள்ளப்படும் லேப்ராஸ்கோபிக் சிகிச்சையின் நன்மைகளும் பெறப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குழந்தைக்கான ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். விரைவில் குணமடைந்த சிறுவனின் குடும்பத்தினர் கே.எம்.சி.எச். நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்தனர்..

சிகிச்சையை குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்லகவுண்டர் பழனிசாமி கூறுகையில் ‘‘மிகவும் அதிநவீன டாவின்சி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கருவியும், தேர்ந்த மருத்துவர்களும், மருத்துவமனையில் இருப்பதால் இத்தகைய அறுவை சிகிச்சைகளை எளிதாக செய்ய முடிகிறது. இத்தகைய பயனுள்ள கருவி, பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...