குடியிருப்புகளில் தொடரும் யானைகள் ஊடுருவல் - கும்கி யானையைக் கொண்டு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறைக்கு உட்பட்ட எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் புகுந்து இடையூறு செய்துவருவதைத் தொடர்ந்து கும்கி யானைகளைக் கொண்டு காட்டு யானைகளை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து சில வாரங்களாக காட்டு யானைகள் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து உடமைகள் மற்றும் ரேசன் கடை, பள்ளி சத்துணவு கூடங்கள், கடைகள் ஆகியவற்றை சூறையாடி வருகின்றன . 

இந்நிலையில், நேற்று  அதிகாலை வால்பாறை அடுத்துள்ள கல்லார் எஸ்டேட்டில் சாகுல் ஹமீது என்பவரின் டீ கடை மற்றும் அருகில் இருந்த சுரேஷ் என்பவரின் மளிகைக்கடை முன்புறத்தில் கதவு ஜன்னல்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.



அங்கிருந்து சென்ற யானைகள் அருகில் உள்ள ஈட்டியார் எஸ்டேட்டில் கலா மற்றும் சுப்பிரமணி ஆகியோர்களது வீடுகளின் ஜன்னல்களை உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை சேதம் செய்தன. தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் யானைகள் செய்வதறியாது தடுமாறின  .

அப்போது பாதுகாப்பின்றி திறந்த நிலையில் இருந்த கிணற்றுக்குள் குட்டி யானை எதிர்பாராத விதமாக விழுந்த நிலையில், தாய் யானையின் உதவியோடு குட்டி யானை மீட்கப்பட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது.



இதேப் போல், திங்களன்று தாய்முடி எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானைகள் சுப்பிரமணி, பாக்கியதாய், செல்வி, குருநாதன், முருகாத்தாள், லட்சுமி, சிவா, பாப்பம்மாள், மோகன், இசக்கியம்மாள், வெள்ளைத்துரை ஆகியோர்களது 11 வீடுகளை சேதப்படுத்தியது.

தொடர்ந்து, வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் நுழைந்து சேதப்படுத்தி வருவதால் அவற்றை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் கும்கி யானைகளைக் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...