விக்கிபீடியா-வில் பொரி உருண்டை, பரட்டை அழகி என்று கலாய்க்கப்படும் பாஜக பிரமுகர்கள்..!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களை மர்ம நபர்கள் சிலர் விக்கிபீடியா இணையப் பக்கத்தில் 'பொரி உருண்டை' என்றும் 'பரட்டை அழகி' என்றும் கலாய்த்து வருகின்றனர். பெயர் மாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருப்பவர் தமிழிசை சவுந்திரராஜன். அக்கட்சியின் முக்கிய தலைவராகவும்,  மத்திய அமைச்சராகவும் பதவி வகிப்பவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இவர்களது வாழ்கை வரலாறு மற்றும் வகித்து வரும் பதவிகள் தொடர்பான விபரங்கள் விக்கிப்பீடியா இணையப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று விக்கிப்பீடியா இணையப்பக்கத்தில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் பொன்.ராதாகிருஷ்ணனின் விவரங்கள் அடங்கிய பக்கத்தில் அவரது பெயருக்கு பதிலாக 'பொரி உருண்டை' என்றும், தமிழிசை சவுந்திரராஜன் விவரங்கள் அடங்கிய இணையப்பக்கத்தில் அவரது பெயருக்கு அருகே 'டுமீல் இசை' மற்றும் 'பரட்டை அழகி' என்றும் பெயரை மாற்றி கலாய்த்து வருகின்றனர்.



சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று  தமிழக பாஜக தலைவர்கள் குரல் கொடுத்ததும் அதனால், சமூக வலைதளங்களில் பாஜக குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.



Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...