ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு : இரண்டாயிரத்து ஐநூறு பேர் பங்கேற்பு


கோவையில் நடைபெற்ற 110-வது பட்டாலியன் ராணுவப் படையில் சேருவதற்கான ஆள்சேர்ப்பு முகாமில் 2500 பேர் கலந்து கொண்டனர். 



110-வது பட்டாலியன் ராணுவப் படையில் 8 ராணுவ படை வீரர்களுக்கும், 3 துப்புரவுப் பணியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது.



இன்று (அக்.,23) காலை தொடங்கிய இந்த முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 2,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, உயரம், மார்பளவு உள்ளிட்ட உடல் தகுதித்திறன் தேர்வு நடைபெற்றது. 11 பேருக்கான காலியிடங்கள் மட்டுமே உள்ள பணிக்கு ஏராளமானோர் பங்கேற்றிருப்பது ராணுவத்தில் பணியாற்றுவதன் ஆர்வம் இளைஞர்களிடையே அதிகரித்திருப்பதை வெளிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...