உடல் உறுப்புதானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நெடும் பயணம்

கிப்ட் ஆப் லைப் அட்வென்ட்சர் என்னும் தன்னார்வ அமைப்பு உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 20,000 கிலோமீட்டர் சாலைப் பயணத்தை தொடங்கியுள்ளது.



இந்த அமைப்பு உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இவர்கள் மில்லினியம் டோனார் என்ற பெயரில் கைபேசி செயலியை தொடங்கியுள்ளனர். உடல் உறுப்புதானம் செய்ய விரும்புவோர் இதில் பதியலாம். மேலும் உடல் உறுப்புதானம் குறித்த தகவல்களையும் இந்த செயலியின் மூலம் அரிந்துகொள்ளலாம்.

அனில் ஸ்ரீவத்சா, சிவானி சோனி, பிரசாந்த் பகத் மற்றும் யஷ்வரதன் சோனி ஆகியோர் இந்த பயணத்தை பெங்களூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளனர். இந்த பயணத்தில் இவர்கள் செய்யும் உடல் உறுப்புதானம் பற்றிய பிரச்சாரங்கள் படமாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்.



இதுகுறித்து பேசிய அனில் ஸ்ரீவத்சா, 'கிப்ட் ஆப் லைப் அட்வென்ட்சர் சார்பாக ட்ரைவ் இந்திய என்ற பெயரில் சுமார் 20,000 கிலோமீட்டர் சாலைப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளோம். கன்னியாகுமரி முதல் இமாச்சல பிரதேசம் வரை உள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் மில்லினியம் டோனார் செயலி மூலம் உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். எங்கள் குழு இன்று கோவையிலிருந்து புறப்பட்டு நாளை கொச்சினுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது' என்றார்.



Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...