சுகாதார சீட்கேட்டின் அடையாளமான அன்னூர் பெரிய குளம்

குப்பைகளால் நிறைந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வரும் அன்னூர் பெரிய குளத்தினை தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்னூர் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 119 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னூர் பெரிய குளம் உள்ளது. அன்னூரில் கனமழை பெய்தால் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வரும் மழை நீர் இந்த குளத்தை வந்தடையும். இந்த குளத்தில் நீர் நிரம்பினால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், 150-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்டமும் உயரும்.

இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்த குளம் தற்போது போதிய பராமரிப்பின்றி குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. முட்புதர்கள், செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றால் குளத்திற்கான நீர் வழித்தடம் முற்றிலும் அடைபட்டுள்ளது.



மேலும், பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தனியார் உணவு விடுதிகளில் இருந்து வரும் கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் அன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் கழிப்பிடக் கழிவு நீர் என பல்வேறு கழிவுகள் இந்த குளத்தில் தான் கலக்கவிடப்படுகின்றன என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சி.சண்முகம்.



பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அன்னூர் குளத்தை தேர்வு செய்து பட்டிகள் அமைத்து குளத்தை மேலும் அசுத்தம் செய்துவருகின்றனர். குளத்தில் பன்றிகள் வளர்ப்பு, கழிவுகள் தேங்குவதை பொதுமக்கள் தடுக்க தவறியதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்றார் அன்னூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடியிருப்புவாசி.

இதுகுறித்து அன்னூர் பஞ்சாயத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அன்னூர் பெரிய குளத்தில் கழிவுகள் எதுவும் கொட்டப்படுவதில்லை. குளத்தில் நிறைந்துள்ள கழிவுகள் விரைவில் அகற்றப்படும் என தெரிவித்தார்.



Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...