டெங்கு ஒழிப்புப் பணிகளில் மாணவ, மாணவியர் இணைந்து பணியாற்ற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் இணைந்து பணியாற்ற மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் முழுவதிலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (அக்டோபர் 21) பள்ளப்பாளையம் பேரூராட்சி 9-வது வார்டு துளசிதாசன் வீதியில் மாவட்ட ஆட்சியர் நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் துப்புறவு சுகாதாரப்பணிகள் தொடர்பாக திடீர் கள ஆய்வு மேற்கொண்டார்.



இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-

கோவையில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளாக பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. தினந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்தும், அரசு அலுவலர்களிடம் இருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு அதன்படி மேற்கொள்ள வேண்டிய பணிகள் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றது.

வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் இணைந்து குழுக்கள் பல அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதிலும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உயர் அலுவலர்களாலும் தினமும் அதிகாலை நேரங்களில் மாவட்டத்தின் பலபகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆய்வுகளின்போது, குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காரணிகளாக அறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்படாத ஆட்டுக்கல், பாட்டில்கள், சிமெண்ட் தொட்டிகள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்படுகின்றது.

உள்ளாட்சித் துறைகளின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை பரிசோதித்தல் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் இயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், காய்ச்சல்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக்குழுகள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன .

மேலும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் ஆகியோர் முன்வந்து தங்களது சுற்றுப்புறத்திலும், பள்ளி கல்லூரிகளிலும், பணிபுரியும் இடங்களிலும் சுகாதாரம் காத்து ஏடிஸ் கொசுப்புழு காரணிகளை அழித்து, பொதுமக்களிடத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சி) கணேஷ்ராம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி பங்கேற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...