வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் வங்கி ஊழியர்கள் மனு

வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜனிடம் இன்று கனரா வங்கி அதிகாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பொதுத் துறை நிறுவனமான வங்கியை தனியார் மையமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். பொதுத் துறை வங்கிகள் நாட்டின் சொத்துக்கள். அவற்றை தனியார்க்கு தாரைவார்க்க அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களின் கோரிக்கை மற்றும் கருத்துக்களை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜன் இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது, வங்கிகள் சங்கத்தின் மண்டல செயலாளர் நந்தகோபால், பொறுப்பாளர்கள் ராகவேந்திரன், ஈஸ்வர், பரணிதரன், ரங்கநாதன், சந்திரசேகர், ராஜிவ் ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...