வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் - நான்கு வீடுகள் சேதம்

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள், நான்கு வீடுகளை சூறையாடின.



வால்பாறை அருகே பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. பன்னிமேடு, சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து கடந்த ஒரு வாரகாலமாக 6 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, ரேஷன் கடை, சத்துணவுக்கூடம், தொழிலாளர்கள் குடியிருப்பு போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது.



இந்த நிலையில், நேற்று (அக்.,18) நள்ளிரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 6 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் காந்தி, மூர்த்தி, கெபீர், சக்திவேல் ஆகியோர் குடியிருந்த பங்களாவின் ஜன்னல் கதவுகளை உடைத்து குட்டி யானை வீட்டிற்குள்ளே புகுந்து, வீட்டில் இருந்த பாத்திரங்கள், கட்டில், பீரோ, தொலைக்காட்சி ஆகியவற்றை சேதப்படுத்தியது.



வீட்டின் பின்புறமாக தப்பிச்சென்ற காந்தி என்பவர் அருகிலிருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டடப்பட்டது. இதனிடையே, தங்களுக்கு காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து ஒருவாரமாக முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கும்கி யானை உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...