திருச்சியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கம்


திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக, திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர், நாமக்கல், சேலம் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

திருச்சியில் இருந்து நாளை (அக்.,17) காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் எண் - 06049, பிற்பகல் 2.30 மணியளவில் கிருஷ்ணராஜபுரம் சென்றடைகிறது. 

இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 17 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 21 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயிலானது, குளித்தலை, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் பங்கராபேட்டை போன்ற நிறுத்தங்களில் நிறுத்தப்படும். திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) ரயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 5.30 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. 

இதேபோல, ரயில் எண் - 82638 கோவை - சென்னை இடையிலான சுவிதா சிறப்பு ரயில் (ஒருவழி) கோவையில் இருந்து வரும் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.10 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 03.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது. 

இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 18 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 3 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 23 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...