நீர்நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஆம்ஆத்மி கட்சி கோரிக்கை


கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ஆம்ஆத்மி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இது தொடர்பாக அக்கட்சி அளித்துள்ள பொதுநல மனுவில், கோவை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள வாலாங்குளம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் கரை பகுதிகளில் இருமருங்கிலும், இரவு நேரங்களில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும், ஆவின் கடைகள் அமைத்தல்/உணவகங்கள் அமைத்தல் போன்றவை இருப்பதால், குளத்தின் பரப்பளவு குறைந்து வருவதுடன், முறையான தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது.

தற்போது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இதுபோன்ற நோய்கள் அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து களஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், மேலும், குளத்தின் கரை பகுதிகளில் உள்ள ஆக்கரிமிப்புகளை அகற்றுவதோடு, மாவட்டத்தின் அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க நீர் நிலைகளை சீர் செய்ய வேண்டிகிறோம். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...