“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மூடக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எளிய கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில், டாஸ்மாக் கடை காரணமாக பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக பெண்கள் குற்றம்சாட்டினர்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில்,

“கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தியதால் ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு மற்றும் போதை விபத்துகளில் சிக்கி பல ஆண்கள் உயிரிழந்துள்ளனர்” என வேதனையுடன் தெரிவித்தனர்.

“எனவே, பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வர காரணமான உள்ளடாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்” என முழக்கமிட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடையை அகற்றுவது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பெண்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இருப்பினும், டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அத்தப்பகவுண்டன்புதூர் பகுதி பெண்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...