பல்லடம் அருகே பிஏபி வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து- 3 பேர் பலி



கோவை தனியார் கட்டட நிருவன சிவில் இன்ஜினியர்ஸ் பிரதீப், விஜயன், மாரியப்பன், சுதாகர், அன்பழகன் ஆகியோர் கொடைக்கானலிற்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று (அக்டோபர் 15) கோவைக்கு திரும்பி காரின் மூலம் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள சாலை வளைவில் முன் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை இல்லாத காரணத்தினால் இவர்கள் வேகமாக ஓட்டி வந்த கார் திரும்ப இயலாமல் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் பிரதீப், விஜயன், மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுதாகர் மாயமான நிலையில் அவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அன்பழகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...