வால்பாறை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20 சதவீதம் போனஸ் கேட்டு அலுவலக முற்றுகைப் போராட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியிம் ஊழியர்கள் 20 சதவீதம் போனஸ் கேட்டு அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 



வால்பாறை அடுத்துள்ள தமிழக அரசுக்கு சொந்தமான சின்கோனா டேன் டீ எஸ்டேட்டில் சுமார் 900-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு, 8.33 போனஸ் மட்டுமே கொடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டேன் டீ எஸ்டேட்டின் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள்  முற்றுகை போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து அறிந்த வால்பாறை தொழிலாளர் ஆணையாளர் முகமது யூசப் தலைமையில் டேன் டீ நிர்வாக மேலாளர் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் முன்னிலையில் டேன் டீ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தமிழக அரசிடம் இருந்து அரசாணை வந்தபின்பு வழங்குவதாக நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர்.



இதைத் தொடர்ந்து இன்று (அக்.,14) மாலைக்குள் போனஸ் வழங்கவில்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த ப்போவதாக  தொழிலாளர் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...