டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் அஜாக்கிரதையாக செயல்படும் அரசு அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைளில் அஜாக்கிரதையாக செயல்படும் அரசு அலுவலர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி மற்றும் அன்னூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் இன்று (அக்டோபர் 13) மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புறவு சுகாதாரப்பணிகளை, ஒவ்வொரு வீடு வீடாகவும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடத்தில் வலியுறுத்தியதாவது,:-

''கோவை மாவட்டம் முழுவதிலும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலர்களாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஒவ்வொறு மாதமும், முதல் 5 தினங்களுக்கு நிலவேம்பு நீர் பள்ளிகளிலேயே வழங்கப்பட்டு வருகின்றது. குடியிறுப்பு பகுதிகளில் தூய்மை காவலர்கள் மூலமும், சுகாதாரப்பணியாளர்கள் மூலமும் பல்வேறு துப்புறவு, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுகாதாரத்துறையின் மூலம் சுழற்சி அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் நடமாடும் மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அரசு ஆரம்ப நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் வருபவர்களை தொடர்ந்து கண்கானித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களும் சுகாதாரம் காத்து நமது மாவட்டத்தை டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்றிட உறுதுணையாக இருந்திட வேண்டும்''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வலியுறுத்தினார்.

மேலும், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் அஜாக்கிரதையாக இருக்கும் அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, உதவி இயக்குநர்கள் (ஊராட்சி) பத்மாவதி, (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், கோட்டாட்சியர் ஆர்.சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...