நீரா பயிற்சி வகுப்புகள் தொடங்கி தென்னை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் விவசாய சங்கம் மனு

நீரா பயிற்சி வகுப்புகளை தொடங்கி தென்னை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



தமிழ்நாட்டில் தென்னை சாகுபடியின் பரப்பளவு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பருவமழை குறைவு, நீர்பற்றாக்குறை, இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் நெல் உட்பட தானியங்கள் பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து வருகிறது.

மேற்கண்ட நிலங்களில் தென்னையை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னையில் இளநீர், நீரா, வெல்லம், தேங்காய், எண்ணைய், சிரட்டை, கயிறு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கிடைக்கின்றன.

இதில், நீரா பானத்தை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. நீராவைப் பயன்படுத்தி வெல்லம், பாகு, சீனி உள்பட பல பொருட்கள் தயாரிக்கலாம். நீரா பானத்தை பயன்படுத்தி நீரா சக்கரை, நீரா வெல்லம், நீரா லட்டு, நீரா தேன், நீரா கேக் போன்றவை கேரளாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு நீரா குறித்து தனிப்பயிற்சி நடத்தப்பட்டு கேரளாவில் பெரும் வெற்றியடைந்துள்ளது. தென்னை விவசாயம் பாதுகாப்புள்ளதாக தெரிகிறது.

கொச்சியில் இயங்கும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், கடந்த பல ஆண்டுகளாக நீரா இறக்கும் பயிற்சி, பதப்படுத்தும் தொழில்நுட்பக் கல்வி அதை மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றும் என்பது போன்ற களப்பயிற்சிப் பட்டறைகளை ஊக்கத் தொகையுடன் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

எனவே தமிழகத்தில் நீரா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் தமிழகத்தில் தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். சர்வதேச தேங்காய் விற்பனை மையம் ஒன்றை கோவையில் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தேங்காய் எண்ணை விநியோகம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...