சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட அருந்ததி இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி அருந்ததியர் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பட்டி கிராமம் மற்றும் கள்ளப்பாளையம், இடையர்பாளையம், கண்ணம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

எனவே, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலம் மற்றும் பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்து தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மற்றும் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...