ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனை சார்பில் இரத்ததானம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா

ஒவ்வொரு ஆண்டும் தேசிய தன்னார்வ இரத்ததானம் தினம் அக்டோபர் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையின் ட்ரான்ஸ்ப்யூஷனால் மெடிசின் துறை சார்பில் தன்னார்வ இரத்த தானம் செய்பவர்கள், இரத்த கொடையாளர்கள், ஒற்றை தானம் ப்ளேட்லெட் கொடையாளர்கள், என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வ இரத்த கொடையாளர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் இரத்த வங்கிக்கான அயராது பணியாற்றிய ஆர்வலர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தியது.

அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த பாராட்டு விழாவில் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி வி.ராமகிருஷ்ணா தலைமை விருந்தினராக பங்கேற்றார். தலைமை நிர்வாக அதிகாரி ராம் குமார், மருத்துவர் சுகுமாரன், மருத்துவ தலைவர் ஐசக் கிரிஸ்டியன் மோசஸ் மருத்துவ இயக்குனர் செந்தில் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட இரத்த தானம் அமைப்பாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



இரத்ததானம் அதிகமாக செய்த அருள் கோகுல் தாஸ், கலந்துகோண்டு நன்கொடை மற்றும் இரத்தம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமை குறித்து பேசினார். 

நோய்தடுப்பு இரத்தவியல் & ட்ரான்ஸ்ப்யூஷனால் மருத்துவ ஆலோசகர் ஸ்ரீதர் கோபால் பேசுகையில், மாணவர்கள் ஊக்கப்படுத்துதல் மற்றும் அவர்களை தன்னார்வ ரத்த தான ஊக்குவிப்பதில் இரத்த கொடை அமைப்பாளர் பங்கேற்போடு, இரத்த தானம் குறித்து எண்ணங்கள் பகிர்வு, முக்கியத்துவம் மற்றும் ஒற்றை தானம் ப்ளேட்லெட் தேவை. பிளாஸ்மா பரிமாற்றம் (TSA), மற்றும் மருத்துவமனையில் இரத்த தேவையை வலியுறுத்தினார். மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகள் எதிர்வரும் தேவைகளுக்கு இரத்த நன்கொடை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். என்றார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...