கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி மீண்டும் கைது!

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிங்களர்களின் செயலைக் கண்டித்தும், இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வைகோ மீது சிங்களர்கள் தாக்கப்பட்டத்தைக் கண்டித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை தமிழ்புலிகள் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பிரவீன்குமார், அந்த அமைப்பைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர் சென்றனர். 

அப்போது, நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர், அவர்களைத் தடுத்துநிறுத்தியுள்ளார். அப்போது, தடையை மீறி போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்குப் புறப்பட்ட திருமுருகன் உட்பட 3 பேரும் போகும் வழியில் சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள கடையில் டீக் குடித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பத்து காவலர்கள் அந்த இடத்துக்கு திடீரென சென்று,  டீக் குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி உட்பட 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...