இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நெசவாளர்களுக்கு அதிகளவு கடனுதவி வழங்கப்படுகிறது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

கோவை மாவட்டம் சாய்பாபா காலனியில் இன்று (27.09.2017) தமிழ்நாடு பஞ்சாலைகழக புதுபிக்கப்பட்ட அலுவலக கட்டிடத்திறப்பு விழா, மற்றும் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்  தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் முனியநாதன் முன்னிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  புதுபிக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்து ரூ.2.60 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  



அப்போது பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழ்நாடு அரசு நெசவாளர்களின் நலன் காக்கின்ற வகையில் சீரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையிலே தமிழகத்தில் 10 ஆயிரம் நெசவாளர்களுக்கான பிரத்யேக பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளது. விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட்லிருந்து 750 யூனிட் ஆகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாகவும் உயர்த்தி இலவச மினசாரம் வழங்கப்பட்டு வருகின்றது. 

இன்றைய தினம் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தின் அலுவலகக்கட்டிடம் ரூ.21 லட்சத்தில் கோவை மாவட்டம் சாய்பாபா காலனியில் 2,500 சதுரடி பரப்பளவில் புதுபிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு பஞ்சாலைகழகத்தின் சொந்தமாக 36 விசைத்தறிகளை கொண்ட தறிக்கூடமும், 10 நாடா இல்லா தறிகளைக் கொண்ட ஒரு தறிக்கூடமும், விருதுநகர் மாவட்டம் அறுப்புக்கோட்டையில் 96 தறிகளைக் கொண்ட ஒரு விசைத்தறிக் கூடமும் மற்றும் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் 96 கைத்தறிகளைக் கொண்ட விசைத்தறிக்கூடமும் செயல்பட்டு வருகின்றது.



 இந்த விசைத்தறிக்கூடங்களில் 150 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இக்கழகத்தின் மூலம் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு தேவையான சீருடை துணிகளையும், அரசின் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் விலையில்லா சீருடைத் துணிகளை உற்பத்தி செய்தும் மற்றும் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்து அரசு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

மேலும், தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்திட வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 500 நெசவாளர்களுக்கு ரூ.2.50 கோடி கடனுதவிகளும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 60 வயது பூர்த்தியடைந்த 5 உறுப்பினர்களுக்கு ரூ.3.54 லட்சம் மதிப்பிலான சேமிப்புத் தொகை, மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் உயிரிழந்த உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் வழங்கும் கருணை தொகையாக 8 பயனாளிகளுக்கு ரூ.6.8 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையும் என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பிலான நெசவளார்களுக்கான உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றது.  இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, கோ-ஆப்டெக்ஸ் வாரியத்தலைவர் கே.வீ.மனோகரன், தமிழ்நாடு பஞ்சாலைகழக மேலாண் இயக்குநர் நடராஜன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குநர்  நாகராஜ், உதவி இயக்குநர் சாமிநாதன், பிச்சைமுத்து, தங்கராஜன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல துணை மேலாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...