கோவை மக்களுக்கு இனி 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் - அமைச்சர் வேலுமணி


கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதும் குறித்தும், கோவை மாநகரத்திற்க்கு குடிநீரைக் எப்படி சீராக வழங்குவது பற்றியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நகராட்சத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட சட்டமன்ற,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் அரசு, மக்களுக்கான எல்லா திட்டங்களையும் சிறப்பாக செய்து கொண்டு வருகிறது. வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கிறது. 

மழை வந்து அணைகள் நிரம்பி வரும் வேளையில், மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சியான சூழலில் பொதுமக்கள் பொறுமையுடன் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் நன்றியைக் தெரிவித்து கொள்கிறேன்.

குறிப்பாக சிறுவானி பகுதியில் உள்ள மக்களுக்கு இனி 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சீராக வழங்கப்படும். இன்றிலிருந்து கோவை மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...