கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் பணிகளைகோவை மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran IAS நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்குட்பட்ட நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகில் அமைந்துள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கான உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran IAS இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கைப்பந்து, இறகுபந்து, கபடி மற்றும் Wushu உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கான உள்விளையாட்டு அரங்கங்கள் இங்கு அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை நேரில் பார்வையிட்ட ஆணையர், பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வில் மத்திய மண்டல உதவி ஆணையர் ச.நா.சண்முகம், உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை நகரின் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி வசதிகளை வழங்கும்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...