கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களை புறக்கணித்த கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.கிருஷ்ணசாமி கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1996ம் ஆண்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணி கட்சியின் ஆதரவோடு இரண்டாவது முறை வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினரான இவர் திமுக,அதிமுக கூட்டணிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்திருந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணக்கமாக இருந்த டாக்டர்.கிருஷ்ணசாமி தேர்தலில் தோல்வியடைந்தார்.

இதனை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.கவுடன் நெருக்கமானதுடன் மத்திய அரசின் கொள்கைகளை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், அரியலூர் மாணவி அணிதா மரணம் குறித்து இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் அவரது கருத்திற்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சமூக நீதி அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம், உங்கள் மகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில்தான் குறைவான மதிப்பெண் பெற்ற உங்கள் மகளுக்கு மருத்துவ சீட்டு கிடைத்ததாக முன்னாள எம்.எல்.ஏ. பாலபாரதியின் குற்றசாட்டிற்க்கு பதில் என்ன என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் பா.ஜ.கா.வின் நிலைப்பாட்டை ஆதரிக்க நீங்கள் மருத்துவ கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளி துவங்க மத்திய அரசிடம் அனுமதி பெறதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கேள்வி எழுப்பினர்.

மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற மத்திய அரசுக்கு சாதகமாக நடந்துகொள்வதாக அரசியல் கட்சியினர் குற்றம் சுமத்துவதாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி, பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் இந்நிலையில், இன்று (19.09.2017) அவரது வீட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கடந்த முறை கேள்வி எழுப்பிய சில முன்னணி பத்திரிக்கைகளை தவிர்த்து குறிப்பிட்ட சில பத்திரிக்கைகளை மட்டுமே அழைத்துள்ளது பிற ஊடகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...