கோவை - பெங்களூரூவுக்கு புதிய விமான சேவை - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு

கோவையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் கோவையில் இருந்து மேலும் ஒரு புதிய விமான சேவையை அறிவித்துள்ளது. 

அதாவது, கோவையில் இருந்து பெங்களூரூவுக்கும், பெங்களூரூவில் இருந்து கோவைக்கும் விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்த விமானப் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.

அதோடு. ஐதராபாத், கொல்கத்தா, விஜயவவாடா, மும்பை, புனே, மங்களூர், டெல்லி போன்ற நகரங்களின் இணைப்பு விமானங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த விமான சேவை இருக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. 

விமான பயண விபரம் :  கோவையில் புறப்படும் நேரம் மாலை 04.05 - பெங்களூரூவுக்கு சென்றடையும் நேரம் மாலை  05.05. இதேபோல, பெங்களூரூவிலிருந்து புறப்படும் நேரம் மாலை 02.50 - கோவைக்கு சென்றடையும் நேரம்  மாலை 03.45. 

புதிய சேவையின் தொடக்க சலுகை விலையாக (ஒரு முறை செல்வதற்கு மட்டும்) ரூ.1949 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...