நடிகர் விஷாலின் சவாலில் வெற்றிபெற்ற தமிழ்கன் இணையதளம்

புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்த தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணைதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று(14.09.2017) வெளியானது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இருப்பினும், புதிதாக படம் திரைக்கு வரும் படங்ளை, அன்றைய தினமே சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களில் வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது. 

இதையடுத்து. நேற்று வெளியான துப்பறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம் தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து திரையரங்குகளைக் கண்காணித்தார். 

இந்த நிலையில், துப்பறிவாளன் திரைப்படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெளியிடப்பட்ட அந்த படத்தை இதுவரை 60,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அதிரடி மன்னன் விஷாலிடம், தமிழ்கன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

நடிகர் விஷாலின் சவாலில் வெற்றிபெற்ற தமிழ்கன் இணையதளம் 

புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்த தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணைதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று(14.09.2017) வெளியானது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இருப்பினும், சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களில், புதிதாக படம் திரைக்கு வரும் போது, அன்றைய தினமே வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது.

இதையடுத்து. நேற்று வெளியான துப்பறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம் தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து திரையரங்குகளைக் கண்காணித்தார். 

இந்த நிலையில், துப்பறிவாளன் திரைப்படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெளியிடப்பட்ட அந்த படத்தை இதுவரை 60,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அதிரடி மன்னன் விஷாலிடம், தமிழ்கன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...