துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், அக்னி நட்சத்திர வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காலிக நிவாரணம் பெற்றுள்ளனர்.


Coimbatore: கோவை: கோவை மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட துடியலூர், வடமதுரை, முல்லை நகர், அப்பநாயக்கன்பாளையம், விஎஸ்கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், மாலை நேரத்தில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மழை, தடாகம், இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

கனமழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அக்னி நட்சத்திர வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு இந்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் இதமான காலநிலை நிலவி வருகிறது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...