பதவியில் நீடிப்பது எப்படி என்பதை மட்டுமே எடப்பாடி தலைமையிலான அரசு ஆராய்ச்சி - காங்கிரஸ் விமர்சனம்

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் மதநல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  நாடாளுமன்ற ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடத்துவது அடிப்படை உரிமை. நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்திரவினை மறுபரீசிலணை செய்ய வேண்டும். அமைதி வழியான போராட்டங்கள் நடத்தக்கூட தமிழக அரசு அனுமதிப்பதில்லை. மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை உச்சநீதிமன்றமே தமிழக அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 



உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி உதவித்தொகையை தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தி விட்டு மாணவர்களின் கல்வி உதவித் தொகையை குறைப்பது அநீதி. 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 24 மணி நேரமும் பதவியில் இருப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. மக்கள் நலனை பேணும் அரசு அமைய இந்த அரசு பதவி விலக வேண்டும். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...