கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் ரயில் மறியல்

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கோவை வழக்கறிஞர்கள் இன்று ரயில் மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.



ரயில் நிலையத்திற்குள் புகுந்த வழக்கறிஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கேரளாவில் இருந்து வந்த அலப்பி-பொக்ரோ ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில் மீது ஏறிய வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி கூறுகையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவில்லை எனில் மீண்டும் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...