கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி

கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் சார்பாக இன்று கோவையில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கண்தான இருவார விழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த இருவார விழா மக்களிடையே கண்தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களிடையே கண்தானத்தை ஊக்குவிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்த கண்தான விழிப்புணர்வு பேரணியினை கோவை மாநகராட்சி உதவி ஆணையர் அண்ணாதுரை மற்றும் கோவை மாநகராட்சி சுகாதார அதிகாரி சந்தோஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.



உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி கண்புரை, கண்ணீர் அழுத்த நோய், வயது மூப்பின் மூலம் ஏற்படும் பார்வை இழப்பிற்கு அடுத்தபடியாக முக்கிய பங்குவகிப்பது கருவிழியினால் உண்டாகும் பார்வை இழப்பாகும். ஏறக்குறைய உலகளவில் 45 மில்லியன் மக்கள் பார்வையிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் சுமார் 15 மில்லியன் மக்கள் பார்வையிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஆண்டிற்கு 2,00,000 கண்கள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நிலையில் 44,806 கருவிழிகள் மட்டுமே கிடைக்கபடுகிறது. இதில் 46 சதம் மட்டுமே பார்வை இழப்பை சரி செய்யபயன்படுகிறது (20,632) மீதமுள்ள 54 சதம் கருவிழிகள் மாற்று அறுவை சிகிச்சைக்குண்டான தரமுடையதாக இருப்பதில்லை.

இதன் விளைவாக கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கான போதிய கண்தானம் கிடைக்கப் பெறாமல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நிபுனர்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 

பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அரசு துறைகள் போன்ற பலர் கண்தானத்தை ஊக்குவித்தாலும் இன்னமும் நமது தேவைக்கு குறைவாகவே கண்கள் கிடைக்கின்றது. 



ஹாஸ்பிடல் கார்னியல் ரிட்ரைவல் புரோகிராம் என்பது மருத்துவமனையில் இறக்க நேரிடும் நோயாளிகளிடமிருந்து கண்தானம் பெறப்படுவது. இதன் மூலமாக கண்தான விழிப்புணர்வும் நல்ல தரமான கண்கள் கிடைப்பதற்க்கும் வாய்ப்புள்ளது. 

இப்பேரணியில் கோயமுத்தூர் சொஸைட்டி ஆப் ஆப்தால்மிக் சர்ஜன்ஸ் தலைவர், பொருளாளர் மருத்துவர் டி.சந்திரசேகர் செயலாளர் கே. சுரேஸ் குமார், மற்றும் கல்லூரி மாணவர்கள் கண் வங்கி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...