பேங்க் ஆப் இந்தியா சார்பில் கோவையில் ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டம், புதிய கிளை துவக்கம்

பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டலம் சார்பில் ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வங்கியின் செயல் இயக்குனர் ஆர்.ஏ. சங்கர நாராயணன் தலைமை தாங்கினார். இதில் ஏற்றுமதியாளர்களுக்கு தங்களது வங்கியின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் தெரிவித்தார். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தங்களது வங்கியில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன என்றும் சங்கர நாராயணன் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் என்பிஜி தெற்கு பொது மேலாளர் ஆர்.கே. மித்ரா, தலைமை அலுவலக கருவூல பொது மேலாளர் ஆர். கணேசன் மற்றும் கோவை மண்டல மேலாளர் டி. ரவீந்திரன் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், ராஜபாளையம் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர்.



மண்டல மேலாளர் டி. ரவீந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஏற்றுமதியாளர்களுக்கு வங்கி அளித்து வரும் நிதி உதவி, செயல்பாடுகள் மற்றும் சிறப்புகள் குறித்து அவர் தெரிவித்தார். உலகம் முழுவதும் 22 நாடுகளில் 61 அலுவலகங்கள் மூலம் அதன் கிளைகள், சார்பு நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து பேங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து ஏற்றுமதியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது வங்கி மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஏற்றுமதியாளர்கள் சந்திப்பின் முக்கிய நோக்கம்

வங்கியின் செயல் இயக்குனர் ஆர்.ஏ. சங்கர நாராயணன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில் என்பிஜி தெற்கு பொது மேலாளர் ஆர்.கே. மித்ரா, வங்கியின் தலைமை அலுவலக கருவூல பொது மேலாளர் ஆர். கணேசன் ஆகியோர் பேசினார்கள். துணை மண்டல மேலாளர் டி.டி.எஸ். ராவ் நன்றியுரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, பேங்க் ஆப் இந்தியாவின் 5124-வது கிளையை ஈரோடு, கங்காபுரம், டெக்ஸ்வேலி வீக்லி மார்க்கெட் பில்டிங்கில் இன்று காலை (21-ந்தேதி) வங்கியின் செயல் இயக்குனர் ஆர்.கே. சங்கர நாராயணன், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன் ஆகியோர் திறந்து வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

என்பிஜி தெற்கு பொது மேலாளர் ஆர்.கே. மித்ரா, தலைமை அலுவலக கருவூல பொது மேலாளர் ஆர். கணேசன் மற்றும் கோவை மண்டல மேலாளர் டி. ரவீந்திரன், டெக்ஸ்வேலி இயக்குனர் மற்றும் லோட்டஸ் குழுமத் தலைவர் பி. பெரியசாமி, டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குனர் பி. ராஜசேகர், டெக்ஸ்வேலி இயக்குனர் இ.பி. குமார் ஆகியோர் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் ரவீந்திரன் பேசுகையில், இந்த கங்காபுரம் கிளை முக்கியமாக வர்த்தகர்களின் தேவையை கருத்தில் கொண்டு பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த கிளையில் அனைத்துவிதமான தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இவை ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். அவர்களின் அனைத்துவித வங்கி தேவைகளையும் முழுமையாக இந்த கிளை பூர்த்தி செய்யும். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் எங்களது கிளையில் கணக்கு துவங்கி எங்களது வர்த்தகத்தை மேம்படுத்துங்கள்' இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, வங்கியின் செயல் இயக்குனர் ஆர்.கே. சங்கர நாராயணன் சிறப்புரையாற்றினார். நிறைவாக, கிளை மேலாளர் பெர்மி ஜோ நன்றியுரையாற்றினார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...