விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை இளைஞரின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற "பசுமை கணபதி"

இயற்கைக்கு எவ்விதத்திலும் தீங்கு ஏற்படுத்தாத வகையில் பசுமையான முறையில் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடுவதற்காக 25 வயதான கோவை இளைஞர் "பசுமை கணபதி" சிலைகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

வடவள்ளியைச் சேர்ந்த எலக்டாரிக் பொறியாளர் ஸ்வரஜித் அலகந்தாவே இந்த புதிய முயற்சியில் இயற்கையை காக்கும் நம் கோவை இளைஞர். பெரும்பாலான பகுதிகளில் விற்பனைக்காக அடுக்கப்பட்டுள்ள இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டிக் கலவையிலான விநாயகர் சிலைகளை பார்த்தே இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு நட்புமிக்க பசுமை கணபதியை தயாரிக்க தூண்டியது என்கிறார் அந்த இளைஞர்.

மேலும் அவர் கூறுகையில், நகரம் முழுவதும் பிளாஸ்டிக் கலவையினால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வரும் சூழலில் களிமண் உள்ளிட்ட இயற்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்ட எனது பசுமை கணபதி சிலைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. "எங்களது இந்த கணபதி சிலைகள் ஒன்று 40 ரூபாய் முதல் 1,100 ரூபாய் வரை என அளவிற்கு தகுந்த வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை, வழிபாட்டிற்குப் பின் பொது இடங்களில் புதைத்தாலோ அல்லது நீர் நிலைகளில் கரைத்தாலோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.



"விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. நீரில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தொடர்ந்து அரசுத் தரப்பிலும், தன்னார்வலர்கள் தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாரிஸ் பிளாஸ்டர் மற்றும் ரசாயன வண்ணப்பூச்சுகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் பெரிய அளவிலான சேதங்களை இயற்கைக்கு ஏற்படுத்தி வருகிறது. களிமண் பயன்படுத்தி நமது பண்டைய முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பசுமை கணபதி மக்கும் தன்மை கொண்டது. அதனால் நகரம் முழுவதும் களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துவது பாதுகாப்பானது" என்கிறார் ஸ்வர்ஜித்.

இயற்கையை மாசுமடுத்துவதை யாரும் விரும்புவது இல்லை. இருப்பினும் ஒரு சில செயல்களால் நம்மை அறியாமல் பல்வேறு முறைகளில் இயற்கையை சீரழித்து வருகிறோம். அதனை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வருட விநாயகர் சதுர்த்தியை எவ்வித தீங்கும் இன்றி நல்ல முறையில் சுற்றுச்சூழல் நட்புடன் கொண்டாடுவோம்.

ஸ்வரஜித் அலகந்தின் "பசுமை கணபதி"யினை வாங்கி பயனடைய விரும்புவோர் 9655667775 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பசுமை கணபதியை வாங்கி மகிழலாம்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...