கோவையில் முக்கிய மூன்று இடங்களில் 'மல்டி லெவல் பார்க்கிங்' அமைக்க மாநகராட்சி முடிவு

கோவை நகர்ப்பகுதியில் வாகன பயன்பாடு அதிகரித்து வருவதால் நகரங்களில் முக்கிய இடங்களான வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பகுதிக்கு வாகனங்களில் வருவோர், அதை நிறுத்த இட வசதியின்றி சாலையோரத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் முயற்சியில் கோவை மாநகராட்சி இறங்கியுள்ளது.

கோவையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் பல ஆண்டுகளுக்கு முன்பே கோவை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்ட இந்த 'மல்டி லெவல் பார்க்கிங்' திட்டம் தமிழக அரசு அல்லது மாநகராட்சி நிதியை எதிர்பார்த்தே இருந்தது. இதனால், கோவையில் 'மல்டி லெவல் பார்க்கிங்' திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இப்போது, தனியார் பங்களிப்புடன் இதைச் செய்வதற்கு தமிழக அரசு முன் வந்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, டவுன்ஹாலில் ரூ.23 கோடி, ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில் ரூ.70 கோடி மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் ரூ.33 கோடி மதிப்பில் இந்த மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. போதிய நிதியாதாரம் இல்லாததால் திட்ட அறிக்கையை அரசு திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. 

இறுதியாக, வணிக வளாகத்துடன் மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக சொந்த செலவில் இதனை கட்டி இயக்கி திரும்ப ஒப்படைக்கும் திட்டத்தில் தனியார் மூலமாக இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, மாநகராட்சி தரப்பில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இதற்கான நிபந்தனை மற்றும் ஆவணங்கள் மாநகராட்சி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கட்டி இயக்கி ஒப்படைக்கும் (பி.ஓ.டி.,) திட்டத்தில், தனியார் நிறுவனங்கள் மூலமாக வணிக வளாகத்துடன் மல்டிலெவல் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்படும். அவர்களே வடிவமைப்பு செய்து நிதி செலவழித்து கட்ட வேண்டும். ஒப்பந்த காலம் 30 ஆண்டுகளாகும். முதல் இரண்டு ஆண்டுகள் கட்டுமான பணி நடக்கும். மீதமுள்ள 28 ஆண்டுகள் அந்நிறுவனத்தாரே கட்டணம் வசூலித்து பராமரிக்க வேண்டும். கட்டணம் எவ்வளவு என்பதை மாநகராட்சி நிர்ணயிக்கும். அத்தொகையில் ஒரு பங்கு மாநகராட்சிக்கும் கிடைக்கும். செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் டெண்டர் இறுதி செய்யப்படும். அக்டோபர் முதல் வாரத்தில் கட்டுமான பணி துவங்கும்'. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...