வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான பயிற்சி வரும் 7ம் தேதியன்று அளிக்கப்படவுள்ளது.

பயிற்சி அளிக்கப்படும் தலைப்புகள்:-

1. தேனீ இனங்களை கண்டுபிடித்தல்

2. பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம்  

3. தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம்

4. தேனைப் பிரித்தெடுத்தல்

5. தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம்

பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாள் அன்று காலை 9 மணிக்குள்ளாக வேளாண் பூச்சியியல் துறைக்கு தங்கள் சொந்த செலவில் வந்து சேரவேண்டும். பயிற்சி கட்டணம் ரூ. 250 செலுத்த வேண்டும். பயிற்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 மணிவரை. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003.

தொலைபேசி: 0422-6611214, இணையதள முகவரி: [email protected].

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...