கோயம்புத்தூர் மாநகராட்சியில் மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த 22.07.2017 முதல் 28.07.2017 வரை 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 445 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 191 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் ரூ.46,600 விதிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் இது குறித்து தெரிவிக்கையில், “பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை அறிவிப்பின்படி மாநகராட்சியின் சுற்றுபுறசூழலைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் அழகினை பராமரிக்கவும், பாதுகாக்கவும், 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் ஆகியவைகளை கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதியில் உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், விற்பனை செய்யவும், கையிருப்புகள் வைத்திருக்கவும் 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. மேலும், அவற்றை கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கும், உபயோகிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழு மாநகராட்சியின் 5 மண்டல வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளில் 05.05.2017 அன்று 89 கடைகளில் 375.5 கிலோவும், 13.05.2017 அன்று 253 கடைகளில் 377 கிலோவும், 19.05.2017 அன்று 274 கடைகளில் 384 கிலோவும், 26.05.2017 அன்று 299 கடைகளில் 510 கிலோவும், 02.06.2017 அன்று 676 கடைகளில் 1506 கிலோவும், 09.06.2017 அன்று 437 கடைகளில் 660 கிலோவும், 16.06.2017 அன்று 571 கடைகளில் 607 கிலோவும், 23.06.2017 அன்று 610 கடைகளில் 3477 கிலோவும், 30.06.2017 அன்று 606 கடைகளில் 754 கிலோவும் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், 07.07.2017 அன்று 865 கடைகளில் 360 கிலோவும், 14.07.2017 அன்று 684 கடைகளில் 513 கிலோவும், 21.07.2017 அன்று 230 கடைகளில் 566 கிலோவும 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 22.07.2017 முதல் இன்று 28.07.2017 வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கிழக்கு மண்டலம்;, 35,36 மற்றும் 37-வது வார்டுக்குட்பட்ட அவிநாசி ரோடு, காளப்பட்டி ரோடு, மற்றும் விளாங்குறிச்சி ரோடு ஆகிய பகுதியில் 74 கடைகளிளும், மேற்கு மண்டலம், 8,9,11,13,15,19,20,22 மற்றும் 23-வது வார்டுக்குட்பட்ட தடாகம் ரோடு, எம்.டி.பி. ரோடு, கிருஷ்ணா நகர், யூனியன் ரோடு, கருப்பராயன் கோவில் வீதி, லிங்கனூர் பிரதான சாலை, நேதாஜி ரோடு, காமராஜபுரம் மற்றும் மில்ட்ரி கோட்டர்ஸ் ஆகிய பகுதியில் 113 கடைகளிளும், வடக்கு மண்டலம், 41-வது வார்டுக்குட்பட்ட சக்தி ரோடு, கே.ஆர்.ஜி நகர், காந்தி மாநகர், கணபதி மாநகர், மற்றும் வி.கே ரோடு பகுதியில் 174 கடைகளிளும், தெற்கு மண்டலம், 76,77,78,79,85,86,87,88,90,92,94,95,96,97,98,99, மற்றும் 100-வது வார்டுக்குட்பட்ட குறிச்சி, குனியமுத்தூர், கோவைபுதூர், செட்டி வீதி, பொன்னையராஜபுரம், போத்தனூர் மற்றும் சுந்தராபுரம் ஆகிய பகுதியில் 49 கடைகளிளும்;;, மத்திய மண்டலம், 25,50,51,71,73,80,81 மற்றும் 83-வது வார்டுக்குட்பட்ட ஃப்ளவர் மார்க்கெட், ரத்தினபுரி, காளிங்கராயன் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, சௌடம்மன் கோவில் வீதி, ராஜ வீதி, 100 அடி ரோடு, கிராஸ் கட் ரோடு மற்றும் சுக்ரவார்பேட், ஆகிய பகுதியில் 35 கடைகளிளும்;;, ஆகமொத்தம் 445 கடைகளில் 191 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் இன்று பறிமுதல் செய்யப்பட்டு, அபராதத் தொகை ரூ.46,600 விதிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு,பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.