நீலகிரியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கல்லூரி மாணவர் ஈரோட்டில் மீட்பு- போலீஸ் விசாரணை

நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் இன்ஜினியர் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் நித்தின்சர்மா. இவரை கடந்த இரு நாட்களுக்கு முன்பு கல்லூரி வாயிலில் வைத்து கடத்திவிட்டதாக அவரது தந்தை ராஜ்பீர் சர்மாவிற்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தனது மகனைக் காணவில்லை எனவும், தற்போது மகனை கடத்தியவர்கள் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக மகனின் தந்தை ராஜ்பீர் சர்மா மேல் குன்னூர் காவல்துறையிடம் புகார் அளித்தார். 

தொடர்ந்து, குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழின் உத்தரவின் பேரில் குன்னூர் நகர காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் மற்றும் மேல் குன்னூர் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 

இதற்கிடையில் தந்தை ராஜ்பீர் சர்மாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதற்கட்டமாக ரூபாய் ஜம்பது ஆயிரம் கொடுக்குமாறு கூறி உள்ளனர். உடனே மகன் நித்தின் சர்மா கணக்கில் ரூபாய் 40 ஆயிரத்தினை தந்தை செலுத்தி உள்ளார்.

இதில் 38 ஆயிரம் ரூபாய் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தப்பட்ட அன்று ரூபாய் 1800 ரூபாய் நித்தின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது போலிசார் விசாரனையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் செல்போன் உரையாடலைக் கண்காணித்ததில் நித்தின் சர்மா சென்னையில் இருந்து பேசுவது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு இரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபர்ரை ரயில்வே போலிசார் பிடித்து விசாரனை செய்ததில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நித்தின் சர்மா என்பது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ள மேல் குன்னூர் ஆய்வாளர் ஜெயமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஈரோடு விரைந்தனர். இதன் தொடர்ச்சியாக செல்போனில் பேசியது மகனா? அல்லது அவனுடன் பேசியது யார்? நித்தின் சர்மா கடத்தப்பட்டாரா அல்லது தந்தையிடம் இருந்து பணம்பெரும் வகையில் நடத்தப்பட்ட நாடகமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...