ஆர்த்தோ-ஒன் சார்பில் நடைபெற்ற சைக்கிள் ரேலி போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

மூட்டுகள் தேய்மானத்தின் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 80 சதவிகிதத்தினர் ஆர்த்ரிட்டிஸ் என அழைக்கப்படும் மூட்டு வீக்கத்தினால் அவதியுறுவதற்கான சாத்தியம் இந்தியாவில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எலும்புகளின் வலுவை மேம்படுத்த உதவுவதால் சைக்கிள் ஓட்டுவது ஆரோக்கியமான பயிற்சிகளுள் ஒன்று என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

முடநீக்கியவியலில் சிறப்பு சிகிச்சை மையங்களுள் ஒன்றாகத் திகழும் ஆர்த்தோ-ஒன், முழங்கால் மூட்டு பராமரிப்புமீது விழிப்புணர்வை அதிகரிக்கவும் மற்றும் சைக்கிள் ஓட்டுவதன் வழியாக அதனால் கிடைக்கும் பலன்களை மக்கள் அறியச் செய்வதற்கும் சைக்கிள் ரேலி ஒன்றை நடத்தியது.



இந்த நிகழ்ச்சியினை கோவை மாநகர துணை ஆணையர் துரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, பேசிய ஆர்த்தோ-ஒன் நிறுவனத்தின் நிறுவனரான டாக்டர். டேவிட் ராஜன், '40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் எதிர்கொள்கின்ற பொதுவான எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சனைகளுள் ஒன்றாக முழங்கால் கீல்வாதம் (மூட்டு வீக்கம்) இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட இள வயதினர் மத்தியில்கூட இந்நோய் பாதிப்பு இருப்பது காணப்படுகிறது. கீல்வாதம், மூட்டுவீக்கம் ஏற்படாமல் முற்றிலுமாக தடுத்துவிட இயலாது என்றாலும்கூட தொடர்ச்சியான உடற்பயிற்சியின் வழியாக இந்நோய் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க முடியும் மற்றும் இப்பாதிப்பு நிகழ்கின்ற காலத்தை தாமதிக்கச் செய்து தள்ளிப்போட முடியும்.



குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிற உடற்பயிற்சியாக இருப்பதால், கால் தசைகளை வலுப்படுத்தவும், தாங்கும் உறுதியை மேம்படுத்தவும் சைக்கிள் ஓட்டுவது பரிந்துரைக்கப்படுகிறது," என்று கூறினார்.

இதயம், நுரையீரல்கள் மற்றும் இரத்தநாளங்களின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவுகிற ஒரு ஏரோபிக் உடற்பயிற்சிபோல் சைக்கிள் ஓட்டுவது இருப்பதால், நமது உடலுக்கு ஒட்டுமொத்த உடற்தகுதியையும், திறனையும் இது வழங்குகிறது. சைக்கிள் ஓட்டுவதை ஒரு தொடர்ச்சியான வழக்கமாகக் கொண்டிருப்பது முழங்கால் பகுதியிலுள்ள வலியை குறைக்கவும் மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள தசையின் சக்தியை மீண்டும் நிலைநிறுத்தவும் மற்றும் நிலைப்புத்தன்மையை மறுபடியும் பெறவும் உதவுகிறது.



'உறுதியான தசைகள் மற்றும் எலும்புகளைப் பெறுவதற்கு பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சியாக சைக்கிள் ஓட்டுவது இருக்கின்றபோதிலும், முறையற்ற வழிமுறைகளில் சைக்கிள் ஓட்டுவது முழங்கால் மீது எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சிறப்பான எலும்பு ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு சைக்கிள் ஓட்டும்போது உடலை வைத்திருக்கும் முறை, வேகம் மற்றும் சைக்கிள் ஓட்டுகின்ற காலஅளவு ஆகியவை ஒருங்கிணைந்து முக்கியமான பங்கை ஆற்றும் காரணிகளாக இருக்கின்றன," என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், இதுகுறித்து சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் அவர் கூறுகையில், உடற்பயிற்சி கூடங்களில் மேற்கொள்ளப்படுகிற பிற உடற்பயிற்சிகளைப்போல் அல்லாமல் சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரு மகிழ்ச்சியான, குதூகலமளிக்கும் உடற்பயிற்சியாக இருப்பதாகவும் அறியப்படுகிறது. நீண்டநேரம் பெடல் செய்து சைக்கிள் ஓட்ட இயலாதவர்களுக்கு, சில நேரங்களில், நிலையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சைக்கிளை ஓட்டுவது பரிந்துரைக்கப்படுகிறது. சமநிலையின்மை மற்றும் கீழே விழுவது போன்ற பிரச்சனைகளைக் கொண்டு கீல்வாதத்தால் அவதியுறுகிற நபர்களுக்கு நிலையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சைக்கிளை ஓட்டுவது, கிடைநிலையில் வைத்துள்ள சைக்கிளை ஓட்டுவது பரிந்துரைக்கப்படுகிறது.



இத்தகைய நேர்வுகளில் வெளியிடங்களில் சைக்கிள் ஓட்டுவதை தவிர்க்க முடிவதோடு முழங்கால் மூட்டுகளுக்கு உடற்பயிற்சியும் கிடைக்கிறது. ஆரோக்கியமான முழங்கால்களைக் கொண்டிருப்பதற்கு சைக்கிள் ஓட்டுவதனால் கிடைக்கும் ஆதாயங்கள் மீது விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இந்த சைக்கிள் ரேலியை நடத்த வேண்டும் என்ற முடிவை ஆர்த்தோவில் உள்ள நாங்கள் எடுத்தோம். எம் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் ஆகியோர் அடங்கிய எமது சமூகத்திற்கு சைக்கிள் ஓட்டுவதில் பலனை முன்னிலைப்படுத்துவதே எமது ஆரம்ப குறிக்கோளாக இருக்கிறது. அத்துடன், பொதுமக்களுக்கும் இச்செய்தியினை கொண்டுசெல்ல வேண்டும் என்பது எமது நோக்கமாக இருக்கிறது," என்று அவர் கூறினார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...