கோயம்புத்தூர் மாநகராட்சியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளும், பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் விதமாக தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சியிலுள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலும் மற்றும் அவர்களது வீடுகளிலும் கழிப்பறையைத்தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என்று உறுதிமொழிக் கடிதங்கள் பெறப்பட்டுள்ளது. இதேபோல, கோவை மாநகராட்சியில் இயங்கும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் அவர்களது பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் கழிப்பறைகளைத்தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என்று உறுதிமொழிக் கடிதங்களும்; பெறப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் 100 சதவீதம் கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்றும், திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவது இல்லை என்றும் அறிவிப்பு செய்ய கோவை மாநகராட்சியால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நடவடிக்கையை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலம், 35-வது வார்டு, கோல்டு வின்ஸ் பகுதியில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவது தொடர்பாகவும், மேற்கு மண்டலம், 7,17,18,22 ஆகிய வார்டு பகுதிகளில் லட்சுமி நகர், சுண்டப்பாளையம், பொம்மண்ணபாளையம மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவது தொடர்பாகவும், வடக்கு மண்டலம், 38 ஆகிய வார்டு பகுதியில் ஏ.டி காலனி போன்ற பகுதியில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவது தொடர்பாகவும், தெற்கு மண்டலம், 85,87,88,90,92,94,95 மற்றும் 96 ஆகிய வார்டு பகுதிகளில் சுந்தராபுரம், குறிச்சி, குனியமுத்தூர், கோவை புதூர், செட்டிவீதி மற்றும் சொக்கம்புதூர் போன்ற பகுதிகளில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவது தொடர்பாகவும், மத்திய மண்டலம், 54,81 ஆகிய வார்டு பகுதிகளில் வெரைட்டிஹால் ரோடு, காந்திபுரம் நகர பேருந்து நிலையம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவது தொடர்பாகவும், ஆகமொத்தம் ஐந்து மண்டலங்களில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவது தொடர்பாக ரூ.2,400 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கோயம்புத்தூர் மாநகரை திறந்தவெளி கழிப்பிடமில்லா நகரமாக அறிவிக்க காரணமாக இருந்து, ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பொதுமக்களுக்கும் மாநகராட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் வருங்காலங்களில் பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக பொது மக்கள் வீட்டிலுள்ள தனிநபர் கழிப்பிடங்கள், பொது கழிப்பிடங்கள் மற்றும் சமுதாயக் கழிப்பிடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், பொது மக்கள் தங்கள் பகுதிகளில் அல்லது அவர்களுடைய வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தால் சம்மந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டால், மாநகராட்சி மூலம் உடனடியாக கழிப்பிடங்கள் கட்ட ஏற்பாடு செய்து தரப்படும்.
மேலும், பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழித்தால் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். ஆகவே, பொது மக்கள் இனி வரும் காலங்களில் கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்தி, கோவை மாநகரை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாகவும், தூய்மையான மாநகரமாகவும் திகழ பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் அவர்கள் தெரிவித்தார்.