கோவை பி.ஆர்.எஸ் பயிற்சி மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்போர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜீன் 21 ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 15 மையங்களில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் பயிற்சி மைதானத்தில் உடல் தகுதி தேர்வு இன்று துவங்கியது.
இந்த உடல் தகுதி தேர்வு வருகின்ற 30 ம் தேதி வரையும், பெண்களுக்கான தேர்வு 31 ம் தேதியும் நடைபெற உள்ளது. இத்தேர்வில் நாள்தோறும் ஆயிரம் பேர் விதம் 3 ஆயிரத்து 875 பேர் பங்கேற்கின்றனர். இதில் உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, ஓட்டப்பந்தயம் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்றுள்ளனர்.