பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு

2016-17 –ம் ஆண்டில் துவக்கப்பட்ட பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், விண்ணப்பித்து, தங்கள் பயிரினை காப்பீடு செய்து கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்காப்பீட்டுத் திட்டம், நடப்பு 2017-18 – ம் ஆண்டிலும் நடைமுறைக்கு வந்துள்ளதால், கோயம்புத்தூர் மாவட்டத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த, அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை, நடப்பு காரிஃப் பருவத்தில் பயிரிட உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். அந்த வகையில், கார் / குறுவை / சொர்ணவாரி பருவ நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, பாசிப்பயிறு மற்றும் பருத்தி ஆகிய வேளாண் பயிர்களும், மஞ்சள், வாழை, மரவள்ளி மற்றும் வெங்காயம் ஆகிய தோட்டக்கலைப் பயிர்களும் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள தகுதியானவை.



தமிழக அரசினால் அங்கிகரிக்கப்பட்ட, கீழ்க்கண்ட பயிர் சாகுபடி செலவினத் தொகையில், 2 முதல் 5 சதவித தொகையை மட்டும் பிரிமியமாக செலுத்தினால் போதும் எனவும், ஒப்புதல் அளிக்கப்பட்ட மீதமுள்ள பிரிமியத் தொகையினை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த வகையில், பருத்தி, மஞ்சள், மரவள்ளி, வாழை மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு 5 சதவிதமும், இதர அறிவிக்கப் பட்ட பயிர்களுக்கு 2 சதவிதமும் பிரிமியம் தொகையாக செலுத்தினால் போதுமானது.

இத்திட்டத்தின் கீழ் மூன்று விதமான இழப்புகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. அதாவது, போதுமான நீர் வரத்து இல்லாததால், தவறிய விதைப்பு, விதைத்த பயிர்களில், இயற்கை இன்னல்களால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப்பின், இரு வார காலத்துக்குள், புயல் மற்றும் அதி மழையால் களத்தில் ஏற்படும் இழப்பு என மூன்று விதமான இழப்புகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். சோளப் பயிருக்கான இழப்பீடு குறுவட்ட அளவில் ஏற்பட்ட பாதிப்பினைப் பொறுத்தும், இதர பயிர்களுக்கான இழப்பீடு, வருவாய் கிராம அளவில் ஏற்பட்ட பாதிப்பினைப் பொறுத்தும், காப்பீட்டு நிறுவனத்தால் தீர்மானிக்கப்பட்டு, இழப்பீடு வழங்கப்படும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தொடக்கக்கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும், கடன் எதுவும் பெறாத விவசாயிகள் தன் விருப்பத்தின் பேரில், வங்கிகளுக்குச் சென்று, விண்ணப்பித்து, உரிய பிரிமியம் தொகையை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இம்மாவட்டத்திற்கு, ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது எனவும், விவசாயிகள் தத்தம் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தினையோ, வேளாண் விரிவாக்க மையங்களையோ தொடர்பு கொண்டு, இத்திட்டம் குறித்த விளக்கங்கள் மற்றும் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள உதவி பெறலாம் எனவும் தெரிவித்தார்.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும், இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையவும் மாவட்ட ஆட்சியர் கோரினார்.

நெல் பயிருக்கு பிரிமியம் செலுத்த இறுதி நாள் 31.07.2017.

அறிவிக்கை செய்யப்பட்ட பயிர், காப்பீட்டுத் தொகை மற்றும் பிரிமியத்தொகை விவரங்கள்:-



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...