கோவையில் நீட் தேர்விற்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவர்கள் கோரிக்கை

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்க கூடாது எனவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென கோவையில் நீட் தேர்விற்கு ஆதரவாக தனியார் பள்ளி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தனியார் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாநில பாடத்திட்டத்தில் படித்த எல்லா மாணவர்களும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கவில்லை எனவும், ஒரு சிலர் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தனர். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற தாங்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கிடைத்துவிடும் என நினைத்து நம்பி இருந்த நிலையில், தமிழக முதல்வர் நீட் தேர்வில் இருந்து அவசர சட்டம் மூலம் விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். 

நீட் தேர்வு கட்டாயம் தேவை எனவு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் புரிந்து படித்தால் எளிதாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் எனவும் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கூடாது எனவும், அப்படி விலக்கு அளித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் எனவும் கூறினர். நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமெனவும், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...